குடிநீர் வழங்க குறைந்தபட்சம் 10 நாட்களாகும்: ஆணையர் அறிவிப்பு
ஆற்றில் செல்லும் வெள்ளம்
ஆரணி நகரிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக செண்பகத்தோப்பு அணை நிரம்பி அணை திறக்கப்பட்டு நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மின் இணைப்புகளும், தண்ணீர் வரக்கூடிய குழாய்களும் சேதமடைந்துள்ளதால், நீரேற்றம் செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தற்போது கேகே நகர் மற்றும் தச்சுரில் செய்யாறு ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்தும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் மின்சாதன பொருட்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் ஆரணி நகர மக்களுக்கு 33 வார்டுகளிலும் நகராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்ய குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஆகும் என தெரியவருகிறது , ஆற்றில் நீர் வடிந்தால் மட்டுமே நீரேற்றம் செய்ய முடியும்.
எனவே நகர மக்கள் அனைவரும் இப்போதுள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தயவுசெய்து குடிதண்ணீருக்காக சாலை மறியல் ஈடுபடவேண்டாம், விரைவில் சரி செய்யப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu