பூனை பிடிப்பதாகக் கூறி நகை திருடிய 2 பெண்கள்
கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி சங்கர் என்பவர் வீட்டுக்குள் பூனை பிடிப்பதாக கூறி ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் புகுந்து 9 பவுன் நகையை திருடிச்சென்றுவிட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில் அப்போதைய கண்ணமங்கலம் போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த திருட்டு வழக்கில் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி எட்டலலிங்கா காலனியை சேர்ந்த ராணி (வயது 40), ராமலம்மாள் (55), ராமு (40), வெங்கட்ராமன் (60), ரத்தினகிரியை சேர்ந்த முரளி (41) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் வழக்கை விசாரித்து 5 பேருக்கும் தலா ஒரு வருடம் ஜெயில்தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu