ஆரணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது
கைது செய்யப்பட்ட அய்யாசாமி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40). இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 16 வயது மகளும், 12 வயது மகனும் உள்ளனர்.
மகள் அருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமி, தனது தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்து உள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார். பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அதிகாரி தமிழ்ச் செல்வி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமிக்கு தந்தை அய்யாசாமி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும் தந்தை அய்யாசாமி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu