சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.வட்டார செயலாளர் செல்வராஜ் வரவேற்றார் . இதில் மாநிலத் தலைவர் பாஸ்கரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சேத்துப்பட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்களாக செயல்படு பவர்களை தடுக்க வேண்டும்.

வட்டாட்சியர் அலுவலகம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயை புதை சாக்கடை யாக மாற்றி கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். கண்ணனூர் ஏரிக்குச் செல்லும் கழிவு நீரை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீதாராமன், மாவட்ட குழுவை சேர்ந்த சதீஷ், மாநில மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!