விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
X

மழையில் சேதமடைந்த பயிர்கள்

நெல் மற்றும் மணிலா பயிர்கள் செத்துப் போனதாக கூறி அதற்கு பாடைகட்டி, நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்

தொடர் மழை காரணமாக ஆரணி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது, அதேபோல் வேளாண்மை உற்பத்திப் பொருட்களும் சேதமடைந்தது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாதிப்பு குறித்து விவரங்களை அளிக்க வேளாண்மை துறைக்கு வரும்போதெல்லாம் வேளாண்மை துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகளை அலை கழிப்பதாக கூறி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பயிர் வகைகளை பாடையில் வைத்து பூஜை செய்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் மழையின் காரணமாக வடிகால் வசதி இல்லாத காரணத்தால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் முழுவதும் மழைநீர் தேங்கி முற்றிலுமாக எரிந்து சேதமானது இதுகுறித்த மனுவை ஆரணி வட்டாட்சியர் அவர்களின் உதவியாளரிடம் மனு அளித்து விட்டுச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!