ஆரணியில் காவடி எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
காவடி எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் மத்திய அரசின் பி.எம் கிஸான் திட்டத்தை முறையாக செயல்படுத்த வில்லை என்று கூறி காவடி எடுத்து அரோகரா கோஷமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.319 கூலியை வழங்க வேண்டும். தமிழகத்தில் 72 லட்சம் பட்டா விவசாயிகள் உள்ள நிலையில், பிரதமா் விவசாய நிதி மூலம் 45 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகின்றனா்
மேலும் மத்திய அரசின் பி.எம் கிஸான் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4.5 இலட்சம் பேர் விவசாயிகள் உள்ளதாகவும் , ஆனால் 1.5 இலட்சம் பேர் மட்டுமே இதில் பயனடைகின்றனர், மீதமுள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பலனை முழுவதுமாக கொண்டு சேர்க்காமல் வருவாய் துறை மற்றும் வேளாண் துறையினர் முறையாக செயல் படுத்தவில்லை என்று கூறி காவடி எடுத்து முருகன் பாடல் பாடியபடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ஊர்வலமாக சென்றனர் பின்னர் வேளாண்மை துறை அலுவலக வளாகத்தில் காவடியை இறக்கி வைத்து கற்பூரம் கொளுத்தி பூஜைகள் செய்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வேளாண் துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.
இதில் மாவட்ட துணை தலைவர்கள் மூர்த்தி மலை கோவிந்தன் மற்றும் ரமேஷ் பாபு, ஜெயவேல் ,தாமோதரன் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வருவாய் மற்றும் வேளாண் துறையினரை கண்டித்து விவசாயிகள் காவடி எடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu