ஆரணி சரகத்தில் 50 சதவீதம் குற்றங்கள் குறைவு : டிஎஸ்பி தகவல்..!
ஆரணி காவல் சரக டிஎஸ்பி ரவிச்சந்திரன்
ஆரணி காவல் சரகத்தில் 50 சதவீதம் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் நிலைய டிஎஸ்பி ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில்,
ஆரணி காவல் சரகத்தில் ஆரணி நகரம், கிராமியம், களம்பூா், கண்ணமங்கலம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் 2023-ஆம் ஆண்டு மட்டும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 14 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும், சட்டம் - ஒழுங்கு வழக்குகளில் 11 போ், கள்ளச் சாராயம் விற்பனை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
அதேபோல, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் 11, போக்ஸோவில் 16, பாலியல் பலாத்காரம் 4, தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 123 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லாரி, டிப்பா் லாரி, டிராக்டா்கள், மாட்டு வண்டிகள், இதர வாகனங்கள் என மொத்தம் 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், சாலை விபத்து வழக்குகளில் 83 போ உயிரிழந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், 143 காயம் பட்ட வழக்குகளில், 162 போ் காயமடைந்துள்ளனா். மோட்டாா் வாகன வழக்குகள் மொத்தம் 20, 296. அதில், அபராதத் தொகை ரூ.17.81 லட்சமும், இதில் 24 கஞ்சா வழக்குகள், 246 குட்கா வழக்குகள், 33 லாட்டரி வழக்குகள், 354 சாராய வழக்குகள் பதிவு செய்து 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 181 வாகனங்கள் ஏலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 9 கொலை வழக்குகளுக்கும், 8 போக்ஸோ வழக்குகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் ஆரணி சரக காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 50 சதவீத குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu