திருவண்ணாமலை மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறப்பு பார்வையாளர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறப்பு பார்வையாளர் ஆய்வு
X

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தேர்தல் சிறப்பு மேற்பார்வையாளர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்படும் மையத்தை தேர்தல் சிறப்பு மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சி.சி.டி.வி. மற்றும் சுழலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். முதலில் தபால் வாக்குகள் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் .பேரூராட்சி பாடல்களுக்கான முடிவுகளை காலை 10 மணிக்கு மேல் தெரியவரும்.

நகராட்சி வார்டுகளுக்கான முடிவுகள் பகல் 12 மணிக்குள் தெரிய வாய்ப்பு உள்ளது. களம்பூர் பேரூராட்சிகளுக்கு ரேணுகாம்பாள் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்டத் தேர்தல் சிறப்பு மேற்பார்வையாளர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!