சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நுகர்வோர் கோரிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நுகர்வோர் கோரிக்கை
X

ஆரணியில்  சமையல் எரிவாயு உபயோகிப்பாளர்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க குறைதீர்வு கூட்டம் நுகர்வோர் கோரிக்கை வைத்தனர்.

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகாவில் உள்ள பொதுமக்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் சமையல் எரிவாயு உபயோகிப்பாளர்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

வட்ட வழங்கல் அலுவலர்கள் லலிதா (ஆரணி), மஞ்சுளா (கலசபாக்கம்), மனோகரன் (போளூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் சிலிண்டரின் எடை குறித்து தெரிவிக்க வேண்டும், வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர் எடை அளவு காண்பிக்க வேண்டும் ,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது, இதனால் பொதுமக்கள் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சிலிண்டரின் விலை உயர்வை குறைக்க வேண்டும் ,இதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும், இதனை கோட்டாட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.

வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டரின் விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்கிறார்களா? என்று அதிகாரிகள் கேட்டபோது இல்லை என பொதுமக்கள் பதிலளித்தனர் . செல்போன்கள் மூலமாகவே சிலிண்டர் புக் செய்யப்படுகிறது, குறுஞ்செய்தி மூலம் தகவல் வருகிறது .அதில் விலையும் வருகிறது . இதனால் உண்மையான விலை என்ன என்பதை தெரிந்து விடுகிறது, கூடுதல் விலை யாரும் கேட்பதில்லை என்று நுகர்வோர்கள் தெரிவித்தனர்.

மேலும் நுகர்வோர்கள் கூறும்போது தங்களுடைய பணியாளர்களுக்கு உண்மையான அடையாள அட்டை வழங்க வேண்டும் அடையாள அட்டை இல்லாமல் வீட்டில் உள்ள பெண்களிடம் சிலிண்டர் வழங்க வந்துள்ளோம் என்று கூறி ஏமாற்றம் செய்யக்கூடாது .

நுகர்வோர்கள் கூட்டம் நடைபெறுவதை முறையான அறிவிப்பு அனைத்து பொது மக்களுக்கும் சென்றடையும் வகையில் கூட்டம் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர் , கூட்டத்தில் கேஸ் ஏஜென்சி முகவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது