ஆரணி அசைவ ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு

ஆரணி அசைவ ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு
X

ஆரணியில் உள்ள அசைவ ஓட்டல்களில்  சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அசைவ ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் அசைவ ஓட்டல்கள் இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் சோதனை நடத்தினார்.

ஆரணி நகரில் சமீப காலமாக அசைவ ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், கெட்டுப்போன உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பி. தமிழ்ச்செல்வி உத்தரவின்பேரில் களப்பணியாளர்களுடன் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் இறைச்சியை தனியாக பிரித்தெடுக்கும் கடைகளிலும், அசைவ ஓட்டல்களிலும், இறைச்சி விற்பனை செய்யும் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் ஆய்வு மேற்கொண்டபின் ஓரிரு தினங்களில் மட்டும் குறைபாடில்லாமல் உணவு வழங்கப்படும் நிலையில் மீண்டும் தரமற்ற உணவே வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே தொடர்ந்து இறைச்சி கடைகள், ஓட்டல்களை கண்காணிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
Similar Posts
ரொம்ப ஈஸி... பெஸ்ட்டான வழி..! பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!
பொது வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு
எல்லாமே மாறப்போகுது.. ஒரே கிளிக்கில் Super App...! ரயில் பயணிகளே!
அரசு பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு: ஒரே ஆசிரியரிடம் பயின்ற  தந்தை,மகன் ஆசி..!
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்!
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
சுகர் பேஷன்டா? தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டாலும் சுகர் பிரச்னை வராமல் இருக்க ஒரு வழி இருக்கு..!
தீபாவளிக்கு இதெல்லாம் செய்யணுமா? பாதுகாப்பா பட்டாசு வெடிங்க மக்களே..!
பாதிக்கு பாதி விலை..! இந்த தீபாவளிக்கு உங்க செல்லத்துக்கு கியூட் கிஃப்ட் வாங்கி குடுங்க..!
ai in future agriculture