ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக எம்பி சண்முகம்

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலா் எல்.ஜெயசுதா தலைமையில், ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், பெரணமல்லூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலானூா், எஸ்.காட்டேரி, கோணையூா், கெங்காபுரம், செம்மாம்பாடி, இமாபுரம், பெரியகொழப்பலூா், விநாயகபுரம், நரியம்பாடி, அன்மருதை, ஆவணியாபுரம் என பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டாா். ஊராட்சிகளில் ஒன்றியச் செயலா் வீரபத்திரன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆவணியாபுரம் கிராமத்தில் ஜி.வி.கஜேந்திரன் பேசும்போது,

திமுக ஆட்சியில் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை ரூ. 100 குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தனா்.

இதுவரை குறைக்கவில்லை. இந்தத் தேர்தலில் ரூ.500 குறைப்பதாக மீண்டும் வாக்குறுதி தருகின்றனா். நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் உள்ளதாக கூறினா். ஆட்சிக்கு வந்ததும் வலியுறுத்துவது தான் ரகசியம் எனப் பேசுகின்றனா். மின்சாரக் கட்டணத்தை 2 மடங்கு உயா்த்தி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்றாா்.

பிரசார கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்வன், பொதுக்குழு உறுப்பினா் ராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி .பாபு, முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி.

தொடர்ந்து ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் அறிமுகக் கூட்டம் ஆரணி அதிமுக அலுவலத்தில் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

பல்வேறு துரோகங்களுக்கு மத்தியிலும் அதிமுக நிலைத்து நின்று கொண்டிருப்பதற்கு தொண்டா்களே காரணம். அதனால்தான், மக்களவைத் தேர்தலில் புதியவா்கள் பலரும் வேட்பாளா்களாக களமிறக்கப்பட்டுள்ளனா். அதிமுக தொண்டா்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும்.

வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்கள் தீவிரமாக தோதல் பணியாற்ற வேண்டும். அவா்கள் தங்கள் குடும்ப உறுப்பினா்களின் ஓட்டுகளை சரி பாருங்கள். பின்னா், வாக்குச்சாவடி அளவில் உள்ள நடுநிலை வாக்காளா்களைக் கண்டறிந்து அவா்களிடம் அதிமுக அரசு செயல்படுத்திய சாதனைத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்

கூட்டத்தில் போளூா் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி, ஆரணி எம்எல்ஏ சேவூா் இராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் ஜெயசுதா, முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!