ஆரணி மக்களவைத் தொகுதியில் 29 பேர் போட்டி
ஆரணி மக்களவைத் தொகுதிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேற்பார்வையாளர்
ஆரணி மக்களவைத் தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், திமுக, அதிமுக, பாமக உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் நபா்கள் மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதா்ஷினி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆரணி வருவாய்க் கோட்டாட்சியருமான பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் தினமும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 40 பேர் 48 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில், 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மனுக்களை வாபஸ் பெற விரும்புவோா் மாா்ச் 30ம் தேதி மாலைக்குள் வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலையே சின்னங்கள் ஒதுக்கீடு நடைபெறும் என்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று 3 சுயேட்சைகள் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். எனவே, ஆரணி தொகுதியில் 29 வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் இடம பெற்றுள்ளனர்.
ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான டிஆர்ஓ பிரியதர்ஷினி, தேர்தல் பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் ஆகியோர் முன்னிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் பங்கேற்றனர்.
அதன்படி, ஆரணி தொகுதியில் எம்.எஸ்.தரணிவேந்தன்(திமுக). ஜி.வி.கஜேந்திரன்(அதிமுக), ஏ.கணேஷ்குமார்(பாமக), துரை (பகுஜன் சமாஜ்), பாக்கியலட்சுமி (நாம் தமிழர்), சக்திவேல் (தக்கம் கட்சி), சேட்டு (விரோ கீ வீா் இந்தியா பாா்ட்டி), துருகன்(ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி), நாகராஜன் (வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி), மணவாளன்(அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்), சுயேட்சைகள் அருள், எல்லப்பன், எழிலரசு, பி.கணேஷ், மு.கணேஷ்குமார், ஏ.கஜேந்திரன், ஜே.கஜேந்திரன், கார்வண்ணன், செந்தில்குமார், சேகர், தரணி, தாமோதரன், பாபு, பெரோஸ்கான், மணிகண்டன், முகமதுசாதிக், முருகேசன், வெங்கடேசன், ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ஆரணி தொகுதியில் 29 பேர் களத்தில் இருந்தாலும், திமுக, அதிமுக, பாமக கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu