அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மது பாட்டில்கள் பறிமுதல்
அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கணேசன்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முழு ஊரடங்கின்போது மது பாட்டில்களை பதுக்கி சிலர் விற்க திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், பழனிவேல், ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது ராட்டினமங்கலம் கிராமத்தில் அரிசி ஆலை தொழிலாளி கணேசன் (வயது 45) என்பவருடைய வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக கணேசன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 35 பீர் பாட்டில்கள், 250 குவார்ட்டர் பாட்டில்கள் என ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 285 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கணேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu