திருத்தணியில் துரித வேகத்தில் காவடி கூடைகள் பிண்ணும் பணியில் தொழிலாளர்கள்

காவடி கூடைகளை பிண்ணும் பெண்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நாளை முதல், 11ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இவ்விழாவை ஓட்டி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் மலர் காவடிகள் தயாரிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. அதாவது காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில் திருத்தணி பெரியார் நகர் மேல்நிலை தொட்டி வளைவு தெரு பகுதி வாசிகள் ஈடுபட்டுள்ளனர்.
இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில் கடந்த ஒன்றரை மாதமாக ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காவடி கூடைகள் பிண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு ஜதை காவடி கூடை, 100-120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே காவடி கொம்பு, மணி மற்றும் துணியுடன், 500-700 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கூடை பிண்ணும் தொழிலாளி கங்கைய்யன் கூறுகையில், கடந்த,35 வருடங்களாக காவடி கூடைகள், பூக்கூடை,, சாப்பாடு வடிகட்டு கூடை, காய்கறி கூடை உள்பட பல்வேறு கூடைகள் மூங்கில் கொம்புகள் கொண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஆடிக்கிருத்திகை என்றால் ஆனி மாதம் முதலே காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம்.
ஒரு நாளைக்கு, 9---12 ஜதை காவடி கூடைகள் ஒரு நபர் தயாரிக்கலாம். ஒரு ஜதை கூடை தயாரிப்பதற்கு,35-40 ரூபாய் செலவாகும் தற்போது ஆடி கிருத்திகை நெருங்கி உள்ள நிலையில் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் ஏராளமான கூடைகள் தயார் செய்து வைத்த நிலையில் கடந்த காலங்களில் எடுத்துக் கொண்டால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு கூடைகள் விற்பனையாகாததால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதால் எங்களுக்கு அரசு கடனுதவி வழங்கினால், வாழ்வாதாரம் சிறக்கும் என கூடை பிண்ணும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆடிக்கிருத்திகை இரவு முதல் மூன்று நாட்கள் மலையடி வாரத்தில் உள்ள சரவணபொய்கை என்கிற திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும். இதற்காக திருத்தணி பருவதராஜகுல மரபினர்களால் தெப்பல் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu