திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய பெண்கள் கைது
கோவில் உண்டியல் பணத்தை திருடிய பெண்கள்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என பல்வேறு அண்டை மாநிலங்களிலி ருந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர் . பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் தேவர் மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த எண்ணும் பணியில் 100-க்கும் மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள் பங்கேற்று காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி 45 நாட்களில் பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கையாக ரூ.1 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரத்து 977 ரூபாய் பணம், 925 கிராம் தங்கம், 9 ஆயிரத்து 802 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.
மேலும் இந்த எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் பணத்தை நூதன முறையில் திருடி மறைத்து வைத்தனர். இந்தத் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு இரண்டு பெண் பணியாளர்களை கோவில் நிர்வாகத்தினர் பரிசோதித்தனர்.
அப்போது அவர்கள் 1 லட்சத்து15.ஆயிரத்து 790 திருடியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து திருத்தணி கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட வீரமங்கலத்தை சேர்ந்த கோவில் பணியாளர் தேன்மொழி (வயது 35), மற்றும் துப்பரவு பணியாளராக பணியாற்றி வந்த ஆர் கே பேட்டை சேர்ந்த வைஜெயந்தி (வயது 44) எஆகிய. இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில் உண்டியல் பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu