திருத்தணியில் பேனர் விழுந்து பெண் காயம்

சிறிய வாகனத்தில் பெரிய பேனரை ஏற்றிக்கொண்டு வந்தா விழாம என்னங்க செய்யும்.... வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
Woman injured by falling banner
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பைபாஸ் சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி செல்ல உள்ளதால் அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் சாலை ஓரங்களில் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர் அமைத்து வந்தனர். பேனர் அமைப்பதற்காக ஆட்டோவில் கொண்டு செல்லும்போது காற்றில் பறந்து பின்னால் இருசக்கர வாகனம் வந்த பெண்கள் மீது பேனர் விழுந்தது.
Woman injured by falling banner
பேனர் காற்றில் பறந்து வந்து விழுந்ததால் காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
திருத்தணி அடுத்த சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் மகள் கீர்த்தனா, (வயது 25.) இவர், தனது உறவினர் கஜேந்திரன் மகள் ரேஷ்மா, (வயது 26). என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்னை—திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்து அ,தி.மு.க, கட்சியினர் பிளக்ஸ் பேனர் ஒன்று பறந்து வந்து இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில், கீர்த்தனாவின் இடது கால் எலும்பு முறிவு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இரு சக்கர வாகனம் ஓட்டிய ரேஷ்மா காயமின்றி தப்பினார்.
இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் பலத்த காயமடைந்த கீர்த்தனாவை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகரித்து வரும் பேனர் கலாச்சாரம்
பொதுஇடங்கள் மற்றும் சாலையோரங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலையோரங்களில் நாளுக்கு, நாள் பேனர்கள் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu