திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் நெசவு தொழிலாளி நீரில் மூழ்கி பலி

ஆந்திரா மாநிலம் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான கிருஷ்ணாபுரம் அம்மம் பள்ளி அணையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு கொசஸ்தலை ஆறு வழியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர் திறக்கப்பட்டது. இதனால் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியான சந்திரசேகர் என்பவர் திருத்தணி அடுத்த சரகம்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நடைபெற்று திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய இவர், அங்கு கொசஸ்தலை ஆற்றில் தேங்கியுள்ள நீரில் குளிக்க சென்றுள்ளார். நீரில் குளித்துக் கொண்டிருந்த போது சந்திரசேகர் திடீரென நீரில் மூழ்கினார்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் தேடி நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசஸ்தலை ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது என உத்தரவிட்டிருந்தும் குளிக்க சென்ற நெசவு தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu