திருத்தணி அருகே இறந்தவரின் சடலத்தை தண்ணீரில் எடுத்து செல்லும் கிராம மக்கள்

திருத்தணி அருகே இறந்தவரின் சடலத்தை தண்ணீரில் எடுத்து செல்லும் கிராம மக்கள்
X

இறந்தவரின் உடலை ஆற்றின் குறுக்காக எடுத்து செல்லும் காட்சி.

திருத்தணி அருகே ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் இறந்தவரின் உடலை ஆற்றில் தண்ணீரில் சுமந்து செல்லும் நிலை உள்ளது.

திருத்தணி அருகே பொம்மராஜிபுரம் ஆற்றின் குறுக்கே போடப்பட்ட தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் இறந்தவரின் உடலை தண்ணீரில் கொண்டு செல்லும் அவலம் தரைப்பாலம் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்டது பொம்மராஜிபுரம் கிராமம். இங்கு,100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் நந்தியாற்றின் அருகே உள்ள காலி இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதாவது கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்வதற்கு, அப்பகுதியில் உள்ள நந்தியாற்றை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய நிர்வாகம் நந்தியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்தது.

இந்நிலையில், கடந்த, 2015 ம் ஆண்டு நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது தரைப்பாலம் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இந்த பாலத்தை சீரமைக்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதனால் கடந்த, எட்டு ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை நந்தியாற்றில் இறங்கி தான் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 70 வயது முதியவர் கன்னியப்பன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரின் உடலை நேற்று சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் போது நந்தியாற்றில் செல்லும் தண்ணீரில் இறங்கி உடலை ஆபத்தான முறையில் கொண்டு சென்றனர். பொம்மராஜிபுரம் பகுதி மக்கள், பல ஆண்டுகளாக சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என பலமுறை ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!