திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம்
X

திருத்தணி முருகன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருத்தணி முருகன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் வந்தார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முலவக்கடவுள், வள்ளி, தெய்வானை உற்சவர் கடவுள்களை வழிபட்டார். திருக்கோயில் சார்பாக விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து வள்ளி தெய்வானை சமேதராய் உற்சவர் தங்கத் தேரில் எழுந்தருளினார். அப்போது தேரை வடம்பிடித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் இழுத்து தேர்பவனி தொடங்கி வைத்தார். வேல் யாத்திரை ஓராண்டு நிறைவாக முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜ்குமார், திருத்தணி நகர தலைவர் ரமேஷ், பள்ளிப்பட்டு ஒன்றிய தலைவர் ஏகநாதன், ஆர்.கே.பேட்டை ஒன்றிய தலைவர் சுரேஷ், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் கற்பகம் குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products