கத்தியைக் காட்டி மிரட்டிய இரண்டு வாலிபர்கள் கைது;போலீசார் விசாரணை

கத்தியைக் காட்டி மிரட்டிய இரண்டு வாலிபர்கள்
Two Threatened Youth Arrested
சென்னை மாநகரில் தற்போது பல மாதஙகளாகவே இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்து வருகிறது. எலக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்கும் இளைஞர்கள் பட்டாக்கத்தியை பிளாட்பார்மில் உரச விட்டு அதில் வரும் தீப்பொறியைக் கண்டு மகிழ்வது, பிறந்த நாள் எனில் நண்பர்களுடன் பட்டாக்கத்தியில் கேக் வெட்டுவது போன்ற கலாச்சாரங்கள் மாநில தலைநகரான சென்னையில் அண்மைக்காலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் நடமாடும் பகுதியிலேயே நடத்தப்படுவதால் எப்படா? என்ன நடக்கும்? என அச்சத்திலேயே பயணிக்கும் நிலைதான் தொடர்ந்து வருகிறது. இதுபோல்தாங்க...திருத்தணியில் இரண்டு வாலிபர்கள் பட்டாக்கத்தியை வைத்து படம் காட்டியவர்கள் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பொதுமக்களுக்கு ஏக நிம்மதி போங்க...
திருத்தணியில் பட்டா கத்தியுடன் சுற்றி வந்து பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி சாலையில் வாலிபர்கள் இருவர் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் பேசி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் அங்கு சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கடிகாச்சலத்தை மிரட்டி அசிங்கமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகாரின் பேரில்,வாலிபர்கள் இருவர் கைது செய்து அவர்களிடமிருந்த பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து திருத்தணி அக்கைய்யா நாயுடு தெருவைச் சேர்ந்த நாகூர் பிச்சை மகன் முகமது யூசப் அலி
(வயது 19), முருகப்பா நகரைச் சேர்ந்த மணி மகன் நிர்மல்(வயது 23) ஆகிய இருவரை கைது செய்தார். விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். கத்தியுடன் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu