திருத்தணி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவர் கைது

திருத்தணி அருகே கோவில் உண்டியலை உடைத்து  பணம் திருடிய இருவர் கைது
X
திருத்தணி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர்.
திருத்தணி அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை கிராம மக்கள் துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருத்தணி அருகே பட்டப்பகலில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மாம்பாக்கசத்திரம் கிராமத்தில், ஸ்ரீராமச்சந்திர மவுன யோகி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து தங்களது முடிந்த காணிக்கைகளை அங்குள்ள உண்டியலில் செலுத்துவர்.

இந்நிலையில் நேற்று மாலை, இருவர் பக்தர்கள் போல் கோவிலுக்கு வந்தனர். பின் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து பணம் திருடிய போது, சத்தம் கேட்டு கோவில் அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து வந்தபோது அவர்களை கண்ட இருவர் அங்கிருந்து தப்பி ஓடு முயன்றனர்.ஆனால் அவர்களை அப்பகுதி மக்கள் துரத்தி இருவரையும் மடக்கி பிடித்தனர். பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உண்டியலில் பணம் திருடியவர்கள் செருக்கனுார் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் குமார் (வயது 35), சோமு,(வயது 55).என தெரிய வந்தது. மேலும் உண்டியலில் திருடிய, 1548.ரூபாய்யை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai and future of education