இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த மகேந்திரன் மற்றும்  உசேன்.

திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

ஆர்.கே.பேட்டை அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். போலீசார் சடலங்கலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் சோளிங்கர் வழி பொன்னை மாநில நெடுஞ்சாலையில் வெடியங்காடு புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் எதிரில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவ இடத்தில் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த ஆர்.கே. பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இறந்தவர்கள் விவரம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இருசக்கர வாகனத்தில் வந்தவர் மகேந்திரன் வயது ( வயது 64), வெடியங்காடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் 100 நாள் வேலை திட்ட பணிக்காக கீரை சாத்து கிராமத்திற்கு மேற்கண்ட வழியாக நோக்கி செல்லும் பொழுது சோளிங்கரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஆர்.கே.பேட்டையில் கோழி இறைச்சி கறிக்கடையில் வேலை செய்யும் உசேன் வயது (வயது 24) என்பவர் வந்துள்ளார். இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர். இருவரது இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதால் சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!