திருத்தணி: சாலையில் சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு!
திருத்தணியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.
திருவள்ளூரை அடுத்த திருத்தணியில் கொரோனா ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருத்தணி பைபாஸ் சாலை, ம.பொ.சி சாலை போன்ற நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாதவாறு கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி, திருத்தணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன், திருத்தணி இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் நகரின் முக்கிய பகுதிகளில், சாலைகளில் சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.
திருத்தணி நகரில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எனவே, அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் ஆய்வாளர் ரமேஷ் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
திருத்தணியில் இதுவரை, முக கவசம் அணியாமல் சென்றதாக 670 வழக்குகளும் சாலைகளில் சுற்றித் இருந்ததாக 116 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஏ.டி.எஸ்.பி மீனாட்சி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu