/* */

திருத்தணி: +2 மாணவிக்கு பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை- இளைஞர் கைது!

திருத்தணி அருகே +2 மாணவிக்கு பேஸ்புக் வலைத்தளம் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி: +2 மாணவிக்கு பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை- இளைஞர் கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவர் ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகி பழகி வந்துள்ளார். மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் அதிர்ந்து போன பெற்றோர் பெண்ணிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர்.

அப்போது பேஸ்புக் மூலம் பழகிய இளங்கோ என்பவர் ஆபாசமாக பேசியதாகவும், இதுதொடர்பாக தனது செல்போனில் பதிவாகி இருந்ததை தாயிடம் காட்டியுள்ளார். தொடர்ந்து இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் மகள் பயந்துபோய் இருப்பதை அறிந்த தாய், உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்ர்.ளார்.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் காவல்துறையினர் அம்மையார் குப்பத்தில் உள்ள இளங்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இளங்கோ, தற்போது ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்வது தெரியவந்தது.

பிளஸ் டூ படிக்கும் மாணவியிடம் செல்போனில் பேஸ்புக் மூலம் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 8 Jun 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  3. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  4. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  8. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  9. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  10. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!