திருத்தணி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி :போலீசார் விசாரணை

டிராக்டர் சக்கரத்தில் அடிபட்டு இறந்த முருகன் .
Tractor Accident One Person Dead
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டூவீலர்களே கண்கொள்ளாக் காட்சியாக காட்சியளிக்கின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பெண்கள் உட்பட இப்போது யாரும் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எங்கு சென்றாலும் டூவீலர்தான் அருகாமையில் உள்ள தெருவிற்கு செல்ல வேண்டியது இருந்தாலும் நடந்து எல்லாம் செல்லமாட்டார்கள். அதிவேகமாக டூவீலரில் செல்ல வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசை. அதிவேகத்தில் சென்று பின் ஆபத்தை வரவழைத்துக்கொள்வதே பலரின் வேலையாக உள்ளது. யாருக்குமே பொறுமையில்லைங்க...கொஞ்சம் நிதானித்தால் எந்த சம்பவங்களுமே நடக்காது. எல்லாமே அவசரம்.. என்ன செய்ய கடைசியில் விபரீத விளைவுதான்....
திருத்தணி அருகே கரும்பு டாக்டர் மோதியதில் சம்சா வியாபாரி உடல் நசுங்கி சம்பவத்தில் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அகூர் காலனி பகுதி சேர்ந்தவர் சங்கரன் மகன் முருகன் (வயது 35). இவர் திருத்தணி பேருந்து நிலையத்தில் சமோசா வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகி மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களை தயார் செய்து கொண்டு வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வியாபாரத்திற்காக திருத்தணி பேருந்து நிலையத்துக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார் .
அப்போது மேல் திருத்தணி அருகே குமார குப்பம் என்ற பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதிக்கொண்டதில் முருகன் நிலை தடுமாறி அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார் இறந்து போன சங்கரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரத்திற்காக மோட்டார் சைக்கிள் சென்ற நபர் பைக் விபத்தில் சிக்கி அருகில் சென்ற டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu