உயிரிழப்பை தவிர்க்க உடனே அரசு மருத்துவமனைக்கு வர திருத்தணி தலைமை மருத்துவர் அறிவுரை

உயிரிழப்பை தவிர்க்க உடனே அரசு மருத்துவமனைக்கு வர திருத்தணி தலைமை மருத்துவர் அறிவுரை
X

திருத்தணி அரசு மருத்துவமனை

கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே அரசு மருத்துவமனைக்கு வந்தால் உயிரிழப்புகளை தடுக்கலாம் என தலைமை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு 4 அவசர சிகிச்சை படுக்கை, 30 ஆக்சிஜன் படுக்கை, 26 சாதாரண படுக்கை என மொத்தம் 60 படுக்கைகள் உள்ளன. தொற்று அதிகம் பாதித்திருந்தால் உள்நோயாளிகளாக சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குறைவான தொற்று பாதிப்பு இருந்தால் முதலுதவி அளித்து, வீடுகள் மற்றும் திருவள்ளூர் சட்ட கல்லூரியில் தனிமை படுத்துகின்றனர்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ராதிகா தேவி இது குறித்து கூறும்போது, நோய்த்தொற்று பாதித்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வராமல் சொந்தமாக மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். பின்னர் 4 அல்லது 7 நாட்கள் கழித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

எனவே காலதாமதம் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!