திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்; தந்தை புகார்!

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்; தந்தை புகார்!
X
ஆர்.கே பேட்டையை அடுத்த பத்மாபுரம் கிராமத்தில் பட்டதாரி பெண் மாயமானார். தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (45). இவரது மகள் பிரியங்கா (20) பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த தந்தை அக்கம் பக்கத்திலும், நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் விசாரித்து பார்த்துள்ளார். எங்கும் இ்லலாததா்ல. அதிர்ச்சி அடைந்த அவர் ஆர்.கே.பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!