தோட்டக்கலை விவசாயத் துறையின் மூலம் பயனடைந்த விவசாயிகளை கலெக்டர் சந்தித்தார்

தோட்டக்கலை விவசாயத் துறையின் மூலம்  பயனடைந்த விவசாயிகளை கலெக்டர் சந்தித்தார்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

திருத்தணி: தோட்டக்கலை விவசாயத் துறையின் சார்பாக பயனடைந்த விவசாயிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் திருவள்ளூர் கலெக்டர்

திருத்தணி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறையின் சார்பாக பயனடைந்த விவசாயிகளை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொதட்டூர்பேட்டை, ஆர்கே பேட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயத் துறையின் சார்பாக பயனடைந்த விவசாயிகளை இன்று நேரில் சென்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் வெங்கடாஜலபதியின் டிராகன் பழம் தோட்டமானது தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயத் துறையின் சார்பாக சிறப்பாக அமையப்பெற்றது. இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட பின்பு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மற்றும் விவசாயத் துறை மற்றும் விவசாயி வெங்கடாசலபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!