திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளி தேர் பவனி:பக்தர்கள் தரிசனம்

வெள்ளித் தேரில் பவனி வரும் திருத்தணி முருகன்.
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழாவில் வெள்ளித்தேர் பவனி. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
Tiruthani Temple Silver Chariot Car
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட தமிழக மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனை அடுத்து இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று திருப்பாடி திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.
Tiruthani Temple Silver Chariot Car
வெள்ளித் தேரில் பவனி வரும் வள்ளி தெய்வானை சமேதரராய் முருகன்.
. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம்,ஜவ்வாது, தேன், பன்னீர், திருநீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு உடைகளால், திருவாபரணங்களால், வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மலைக் கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவில் ஒரு பகுதியாக வள்ளி தெய்வானை சமேத உற்சவர் வெள்ளித்தேரில் எழுந்தருளி மலைக் கோவில் மாடவீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் அரோகரா என்ற என்ற நாமத்தை உச்சரித்தும் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று இரவு சுவாமி தரிசனம் செய்ய கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு மற்றும் திருப்படி திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu