திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.96 கோடி

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.96 கோடி
X

உண்டியல் காணிக்கையை எண்ணும் பக்தர்கள்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.96 கோடி செலுத்தியுள்ளனர்.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியல் செலுத்திய காணிக்கை பணம் ரூபாய் 1.96 கோடி என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் ஆகும்.

இந்த இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் அழகு குத்தி, சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து தெப்ப திருவிழாவும் மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை அடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக கொண்டு வந்த பணம், தங்க நகை, வெள்ளி ஆகியவற்றை ஆளை வாகத்தில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்னும் பணி நேற்று திருத்தணி முருகன் கோயிலில் மலைக்கோவிலில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் ரமணி முன்னிலையில் திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள், தன்னார்வலர்கள், என 200க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை என்னும் பணியினை மேற்கொண்டனர்.

இதன் முடிவில் பக்தர்கள் செலுத்திய பணம்1,96,91,409/- கோடி ரூபாயும்,185, கிராம் தங்கமும்,13,000 கிராம் பொருட்களை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!