திருத்தணி நகர மன்ற சாதாரண கூட்டம்: 60 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருத்தணி நகர மன்ற சாதாரண கூட்டம்: 60 தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

திருத்தணி நகர மன்ற கவுன்சிலர்கள் கூட்டம்.

திருத்தணி நகர மன்ற சாதாரண கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் ஆணையர் அருள் வரவேற்றார். நகர்மன்ற துணைத் தலைவர் சாமிராஜ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வரவு---செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, நகராட்சியில், 21 வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, 50 லட்சம் ரூபாய் பொது நிதியில் ஓதுக்கீடு செய்யப்பட்டது.

அமிர்தாபுரம், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, சித்துார் ரோடு, சென்னை பை—பாஸ் சாலை ஆகிய இடங்களில் உள்ள சுடுகாடு பகுதியில் மொத்தம், 20 மின்விளக்குகள் ஏற்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நகராட்சி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநி தியின் திருவுருவச் சிலை அமைப்பதற்கு அரசிடம் அனுமதி கோரியும், நகராட்சியில், 21 வார்டுகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என, 20 பள்ளிகளை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மொத்தம், 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!