திருத்தணி அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து பணம், நகை கொள்ளை

திருத்தணி அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து பணம், நகை கொள்ளை
X

திருத்தணி அருகே கொள்ளை நடந்த வீடுகளில் ஒன்று.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவன்(59) குடும்பத்தினர் நேற்று இரவு முன் பக்கத்தில் தளம் போட்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின் பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை, ரூ. 38 ஆயிரம் கொள்ளையடித்தனர்.

பின்னர் பக்கத்து வீட்டில் அவரது தம்பி ஆனந்தன் வீட்டின் பின் பக்க கதவு உடைத்து 4 சவரன் நகை திருடப்பட்டது. அதே பகுதியில் உள்ள வெங்கடரத்தினம் என்பவரின் வீட்டை உடைத்து பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவரது பீரோவில் நகை , பணம் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பிச்சென்றுள்ளனர்.

ஒரே நாள் இரவில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!