திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் தின விழா

திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் தின விழா
X

அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் நேற்று திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் நேற்று திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பிரகாசம் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒன்றிய கவுன்சிலர் முத்துராமன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.சி .ராமன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் தேசப்பன், திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நிர்வாகிகள் புலவர் பூ.சு. ஆறுமுகம், மே.மு. மாதவன், ஆனந்தன், பார்த்திபன், சுந்தரேசன், இளங்கோவன், ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்