திருத்தணி தணிகை புதுமை மாதா ஆடம்பர தேர் திருவிழா

திருத்தணி அமிர்தாபுரத்தில் உள்ளது தணிகை புதுமை மாதா திருத்தலத்தின் 51வது ஆண்டு பெருவிழா நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அமிர்தாபுரத்தில் உள்ளது தணிகை புதுமை மாதா திருத்தலம். இந்த திருத்தலத்தின் 51வது ஆண்டு பெருவிழா கடந்த 29ல் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் ஜபமாலை, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன் தினம் மாலை ஏசுநாதர், தணிகை மேரி மாதா வாகனத்தில் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் எழுந்தருளி தேர் பவனி நடைபெற்றது. ரயில் நிலையம் சந்திப்பு பகுதியிலிருந்து தொடங்கி மா.பொ.சி சாலை, பஜார் வீதி, சித்தூர் சாலை வழியாக தேர் பவனி நடைபெற்று தணிகை புதுமை மாதா திருத்தல் சென்றடைந்தது. தேர் பவனியில் ஆயர்கள், மத போதகர்கள், கிறிஸ்தவர்கள் மேரி மாதா பாடல்கள் பாடிக்கொண்டு மேள தாளங்கள் முழங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu