திருத்தணி: பெண்ணின் வயிற்றில் கத்தரிகோல்; மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!
வயிற்றில் கத்தரிகோல் வைத்து அறுவை செய்யப்பட்ட பெண்.
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அவ்வபோது கத்தரிக்கோலை வயிற்றின் உள்ளே வைத்து அறுவை சிகிச்சை செய்து முடித்து விடும் சம்பவம் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருவது தெரிந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது கத்திரிக்கோலை உள்ளே வைத்து தைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிகோலை வைத்து தைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு வயிற்றில் அடிக்கடி வலி எடுத்ததால் இதுபற்றி பரிசோதனை செய்து பார்த்தபோது இந்த விவகாரம் வெளி உலகிற்கு தெரியவந்தது.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரத்தில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத் துறை பணிகள் துறை இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு புதுப்பித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu