பழங்குடி இன மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன்

பழங்குடி இன மக்களுடன்  அமர்ந்து உணவு  சாப்பிட்ட திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன்
X
பழங்குடி இன தம்பதியினரின் குழந்தை பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடன் அமர்ந்து எம்எல்ஏ சந்திரன் உணவு சாப்பிட்டார்.

நாட்டின் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் ஊராட்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரன் வீரவநல்லூர் ஊராட்சியில் உள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து அப்பகுதியின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்/

மேலும் அப்பகுதியில் வாழும் மக்களிடம் கலந்துரையாடி அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை கேட்டிருந்தார் மேலும் அப்பகுதியில் உள்ள இருளர் இணைத்த சேர்ந்த தம்பதியினரின் குழந்தை பிறந்தநாள் என்பதால் சட்டமன்ற உறுப்பினரிடம் தாங்கள் எங்கள் வீட்டில் சிற்றுண்டி உட்கொள்ள வேண்டும் என்று கேட்டனர்.

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் அவர்களுடன் சென்று பிறந்தநாள் காணும் குழந்தை திவ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து சிற்றுண்டி உட்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களுக்கு இந்த ஆண்டு சிமெண்ட் சாலை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, என் கிருஷ்ணன், மற்றும் அந்தோனி உள்பட நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and business intelligence