திருத்தணியில் கொரோனா சிகிச்சை: சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆய்வு!

திருத்தணியில் கொரோனா சிகிச்சை: சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆய்வு!
X
கொரோனா சிகிச்சை குறித்து திருத்தணிஎம்எல்ஏ சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்துள்ளது. ஆனாலும், இன்னும் பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். முறைப்படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து அரசு கண்காணித்து வருகிறது. அந்தந்த தொகுதிகளில் உள்ள எம்எல்ஏக்களும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கொரோனா தொற்று ஏற்பட்ட மக்கள் திருத்தணி அரசு பொது மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் கொரோனா சிகிச்சைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!