திருத்தணி: ஏழைகளுக்கு உணவு- கொரோனா தடுப்பு உபகரணங்கள்!

திருத்தணி: ஏழைகளுக்கு உணவு- கொரோனா தடுப்பு உபகரணங்கள்!
X

எஸ். சந்திரன் எம்எல்ஏ, திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி ஆகியோர் ஏழைகளுக்கு உணவு வழங்கிய காட்சி. 

திருத்தணி அறக்கட்டளை சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு, கொரோனா தடுப்பு உபகரணங்கள் எம்.எல்.ஏ. சந்திரன் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் ஏழைகள், கூலித்தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பஜார் வீதி, மா.பொ.சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு மற்றும் முக கவசம், சானிடைசர் போன்ற கொரோனா தடுப்பு உபகரணங்களையும் நம் திருத்தணி அறக்கட்டளை சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி ஆகியோர் பங்கேற்று உணவு மற்றும் பொருட்களை வழங்கினர். அதேபோல் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினர். நாள்தோறும் இதேபோன்று உணவு வழங்கப்படும் எனவும் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!