திருத்தணியில் 7 கறவை மாடுகளை வேனில் கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்; மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு

திருத்தணியில் 7 கறவை மாடுகளை வேனில் கடத்தியவர்கள்  தப்பி ஓட்டம்;  மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு
X

திருத்தணியில் கடத்தப்பட்ட கறவை மாடுகள்  போலீசாரால் மீட்கப் பட்டு கோசாலையில் ஓப்படைக்கப்பட்டது.

திருத்தணி அருகே 7 கறவை மாடுகளை வேனில் கடத்தி வந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர். கைப்பற்றப்பட்ட மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் வாகன சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது காட்பாடி பகுதியிலிருந்து ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட மகேந்திரா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது காவல்துறையினர் வேனை மடக்கி சோதனை செய்வதற்காக ஆயத்தமான நிலையில் வேனை 100அடி தூரத்தில் நிறுத்தி விட்டு வேனில் வந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அந்த வேனில் 7 கறவை மாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த கறவை மாடுகளை பாலாபுரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சோதனை செய்தனர்.

அதன் பிறகு திருவாலங்காட்டில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் கோசாலை மையத்தில் ஒப்படைத்தனர். கறவை மாடுகளை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. கடததியவர்கள், என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்