திருத்தணி முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா: பக்தர்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா: பக்தர்கள் தரிசனம்
X

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டின் கடைசி நாளான நேற்று திருப்புகழ் திருப்படி திருவிழா நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழாவில் பக்தர்கள் பூஜைகள் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா. பக்தர்கள் பூஜைகள் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டின் கடைசி நாளான நேற்று திருப்புகழ் திருப்படி திருவிழா விமர்சியாக நடைபெற்றது.

விழாவையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டு தங்க,வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் அருகில் முதல் திருப்படி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. திருக்கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி தலைமையில் பஜனைக் குழுவினர் முன்னிலையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி ஆகியோர் திருப்புகழ் திருப்படி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பாகவும் ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு மலர்கள் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜைகள் செய்யப்பட்டது. அதேநேரத்தில் பஜனைக் குழுவினர் திரு முருகன் பக்தி பாடல் இசைத்துக் கொண்டு மலை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பெண்கள் படிகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு கற்பூரம் ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். காலை 11 மணிக்கு உற்சவர் தங்கத் தேரில் எழுந்தருளி மலைக் கோவில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

புத்தாண்டையொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்படும் என்றும் நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பக்தர்கள் முக கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளி பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. தொடக்க விழாவில் நகர திமுக பொறுப்பாளர் வினோத் குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மு. நாகன், நிர்வாகிகள் கணேசன், சாமிராஜ் நாகராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி