நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய சிறுவன்; அமைச்சர் நிகழ்ச்சியில் மெய் சிலிர்ப்பு சம்பவம்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய சிறுவன்; அமைச்சர் நிகழ்ச்சியில் மெய் சிலிர்ப்பு சம்பவம்
X

தேசிய கீதத்திற்கு சல்யூட் அடிக்கும் மாணவன்.

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலித்த தேசிய கீதத்திற்கு மாணவன் சைக்கிளிலிருந்து இறங்கி மரியாதை செலுத்தியது மெய் சிலிர்க்க வைத்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் ஒலித்த போது அவ்வழியாக சென்ற பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் இருந்து இறங்கி நின்று மரியாதை செலுத்திய படி நின்றது அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தது.

திருத்தணியில் வருவாய்த்துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா, சாதி சான்று மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின் முடிவில் தேசியகீதம் ஒலித்த போது அவ்வழியாக சென்ற பள்ளி மாணவன் சைக்கிளில் இருந்து இறங்கி நின்று சல்யூட் அடித்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்.

இதனை கவனித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், எம்எல்ஏ., உள்ளிட்டோர் சிறுவனின் நாட்டுப்பற்றை உணர்த்தும் மெய் சிலிர்ப்பு நிகழ்வை பார்த்து வியந்தனர்.

Tags

Next Story
ai as the future