ஜெகத்ரட்சகன் எம்.பி., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு..!
அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன்
அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு.
அரக்கோணம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க, வேட்பாளர் ஏ.எல்.விஜயனை விட, 3.05 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இது லோக்சபா தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் எம்.பி., ஜெகத்ரட்சகன் தனக்கு ஓட்டுகளை சேகரித்த தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருத்தணி சட்டசபை தொகுதியில் நடந்தது.
இதில் ஜெக்தரட்சகன், திருத்தணி எம்.எல்.ஏ.,வும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளருமான எஸ்.சந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான திருத்தணி எம்.பூபதி ஆகியோர் திருத்தணி ஒன்றியத்தில் மத்துார், புச்சிரெட்டிப் பள்ளி, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனுார், அத்திமாஞ்சேரிபேட்டை போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று கட்சி நிர்வாகிகளுக்கு எம்.பி., ஜெகத்ரட்சகன் நன்றி தெரிவித்தார்.
அப்போது திருத்தணி தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்வேன் என உறுதி கூறினார். அப்போது, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆரத்தி ரவி, கிருஷ்ணன், பழனி, ரவீந்திரா, சீ.ஜெ.சீனிவாசன், திருத்தணி திமு.க. நகர செயலாளர் வினோத்குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu