திருத்தணி: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் தேர்வு

திருத்தணி: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் தேர்வு
X
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 13வது மாநில தேர்தலில் 23 பொறுப்புகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அமைப்பு தேர்தல்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 13வது அமைப்பு தேர்தலுக்கான வட்டார நகர மாவட்ட தேர்தல்கள் நடைபெற்றது.

மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஸ்ரீ ராதாகிருஷ்ணன் திருமண மண்டபத்தில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையாளராக முன்னாள் பொதுச் செயலாளர் கே. பாலசந்தர்,பொறுப்பேற்று மொத்தம் 23பொறுப்புகளுக்கான தேர்தலை நடத்தி கொடுத்ததார். நிகழ்ச்சியின் இறுதியில் 23 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உறுதி மொழி ஏற்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி