ஆந்திராவிற்கு அனுமதியின்றி கரும்பு ஏற்றுமதி: கண்டுக்கொள்ளாத ஆலை நிர்வாகம்

ஆந்திராவிற்கு அனுமதியின்றி கரும்பு ஏற்றுமதி: கண்டுக்கொள்ளாத ஆலை நிர்வாகம்
X

டிராக்டர் மூலம் ஆந்திராவிற்கு எடுத்துச்செல்லும் கரும்புகள்.

ஆந்திராவிற்கு அனுமதியின்றி 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரும்பு எடுத்துச்செல்வதை திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, கடம்பத்தூர், ஆர்.கே.பேட்டை பகுதிகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முன் பதிவு செய்துள்ளனர்.

தனியார் ஆலைகள் செப்டம்பர் மாதம் முதலே கரும்பு அரவைத் தொடங்கி விட்டதால், விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பு தனியார் ஆலைகளுக்கு அனுப்பி வரும் நிலையில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் தனியார் சர்க்கரை ஆலைகள் பயன் பெறும் வகையில் மூன்று மாதங்கள் கால தாமதமாக நவம்பர் முதல் வாரத்தில் அரவைத் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் திருத்தணி பகுதியில் பெரும்பாலான கரும்பு விவசாயிகள் பள்ளிப்பட்டு அருகே ஆந்திராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு அனுப்பி வருகின்றனர். கரும்பு தனியார் ஆலைகளுக்கு அனுப்பத் தடை உள்ள நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளாததால், தினம் தோறும் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரும்பு ஆந்திராவில் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்புகின்றது.

கரும்பு அரவை இலக்கை கூட்டுறவு சர்க்கரை ஆலை எட்ட முடியாத அதே நிலையில் பள்ளிப்பட்டில் கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், அனுமதியின்றி ஆந்திராவிற்குச் செல்லும் கரும்பைத் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!