திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கு உள்ளே புகுந்த நல்லபாம்பு - பரபரப்பு

திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கு உள்ளே புகுந்த நல்லபாம்பு - பரபரப்பு
X

அரசு உரக்கிடங்கு உள்ளே புகுந்த நல்லபாம்பு மீட்கப்பட்டது. 

திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கிற்கு உள்ளே புகுந்த நல்லபாம்பினை, தீயணைப்புத்துறையினர் பிடித்து வெளியே விட்டனர்.

திருத்தணி அருகே உள்ள தும்பிகுலம் கூட்டுறவு சொசைட்டி உரக்கிடங்கு விற்பனை நிலையம் உள்ளது. இதனுள், நேற்று இரவு நல்ல பாம்பு உள்ளே சென்றதாக சொசைட்டி ஊழியர்கள், தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி நிலைய அதிகாரி அரசு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள், உரக்கிடங்கு பகுதியில் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது. இதனை, திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் வனப்பகுதியில் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் கூட்டுறவு சொசைட்டி உரக்கிடங்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்