ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X
ஷேர் ஆட்டோவுடன் கைது செய்யப்பட்ட ராஜேஷ்.
திருத்தணி அருகே ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மூலம் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமை பொருள் பாதுகாப்பு குற்றப் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் விரைந்து சென்ற குற்றப்புலனாய்வுத் துறையினர் மறைந்திருந்து கண்காணித்தபோது சுமார் ஒரு டன் எடையுள்ள ரேஷன் அரிசியை ஷேர் ஆட்டோ மூலம் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா (40)என்ற பெண் ஷேர் ஆட்டோவில் அரிசி கடத்துவது தெரியவந்தது .

இதையடுத்து ஷேர் ஆட்டோவை மடக்கி பிடித்து ஆட்டோவில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஷேர் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து புஷ்பா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் (34)ஆகிய இருவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜேஷை திருவள்ளூர் கிளை சிறையிலும் புஷ்பாவை புழல் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!