சரக்கு வாகனத்தில் செம்மரக்கட்டை கடத்தல் : 3 பேர் கைது
திருத்தணியில் செம்மரம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று வாலிபர்கள்.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார்க்கு செம்மரம் கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. இத்தகவல் பெயரில் அவரது தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் திருத்தணி அருகே மாம்பாக்கம் என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனம் வந்தது. போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்ததில் அதில் கட்டுமான பொருட்களுக்கு கீழே செம்மரக் கட்டைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை போலீசார் பிடித்தனர், இதற்கு பாதுகாப்பாக சொகுசு காரில் வந்த அந்த சொகுசு கார் மற்றும் ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆகிய மூவரையும் பிடித்தனர் .
3. வாகனங்களையும் பறிமுதல் செய்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரணையில் செம்மரம் கடத்தலில் பிடிப்பட்ட சீனிவாசன்(48 ), பரணி (35) இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, ஜானகபுரம் பகுதியே சார்ந்தவர்கள் என்பதும்,
அஜித் (23) ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது., இவர்கள் மூவரையும் வனத்துறையிடம் ஒப்படைத்து அவர்களிடம் இருந்த 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டை, மற்றும் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள சரக்கு லோடு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,
இவை அனைத்தையும் திருத்தணி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் இதுகுறித்து வனத்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu