குழந்தைகளிடம் பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்மஅடி

குழந்தைகளிடம் பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்மஅடி
X

பைல் படம்.

குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்மஅடி கொடுத்தனர்.

திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள வெளியாகரம் பஞ்சாயத்து பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 55 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இதே பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பணி புரியும் பொதட்டூர்பேட்டை திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ஜெய கோபி(46) என்ற ஆசிரியர் பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளிடம் குழந்தைகளிடம் சாக்லெட் மற்றும் செல்போன் கொடுத்து விளையாடுவதுபோல் நடித்துக்கொண்டு பாலியல் சீண்டல் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த குழந்தைகள் பெற்றோர்களிடம் கூறமுடியாத அளவிற்கு தகாத செயல்களில் ஆசிரியர் ஈடுபட்டுள்ளார். இந்த குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களிடம் கூறி வந்த நிலையில் அந்த பள்ளிக்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் பள்ளியின் முன்பு வைத்து ஆசிரியர் ஜெய கோபியை கடுமையாக தாக்கினர்.

ஆசிரியர்கள் மீது கடுமையான தண்டனை தமிழக அரசு வழங்க வேண்டும். இதுபோல் ஆசிரியர்கள் இருந்தால் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, குழந்தைகளின் பாதுகாப்பு எப்படி என்பதனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மறுபரிசீலினை செய்து குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் தகுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இப்படி கேவலமான முறையில் தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜெய கோபி மீது கடுமையான தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பெற்றோர்கள் ஜெய கோபி ஆசிரியர் கடுமையாக தாக்கி பள்ளிப்பட்டு காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் துறையை சேர்ந்த ஆய்வாளர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெய கோபி மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.






Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil