திருத்தணியில் 4 டன் செம்மரக் கட்டை பறிமுதல்: 4 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள்.
Today News in Thiruvallur District - திருத்தணி சித்தூர் ரோட்டை பகுதியில் வசித்து வருபவர் ராணி (வயது 63). இவரது கணவர் வஜ்ஜிரவேலு என்பவர் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று இறந்துவிட்டார். வஜ்ஜிரவேலு சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தாழவேடு கிராமத்தில் வஜ்ஜிர வேலுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அரசு அனுமதி பெற்று அந்த நிலத்தில் ராணி ஆடுகளை வளர்த்து வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறையிடம் அனுமதி பெற்று செம்மரங்களை வெட்டி விற்பனை செய்தார். இந்நிலையில், வெட்டி விற்கப்பட்ட செம்மர கட்டைகளின் வேர்களை உரிய அனுமதியின்றி தோண்டி எடுத்து அவரது தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளனர்.
இதையறிந்த ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செம்மரக்கட்டை தரகர் சங்கர் (55) அதிக விலைக்கு செம்மரக்கட்டைகளை விற்பதாக ராணியிடம் கூறியிருந்தாராம். இதனை ராணி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இடைத்தரகர் சங்கர், ஆந்திர மாநிலம் நாராயணவனத்தைச் சேர்ந்த துரைவேலு (52), திருப்பத்தூரைச் சேர்ந்த நாராயணரெட்டி (47), திருத்தணியைச் சேர்ந்த அத்திமாஞ்சேரிப்பேட்டை சீனிவாசன் (34) ஆகியோருடன் சேர்ந்து தாழவேடு பகுதியில் மரம் விற்கத் திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையில் திருப்பதி செம்மரக்கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ரெட்டி, மாவட்ட வன அலுவலர் நரசிம்மராவ் ஆகியோருக்கு கடத்தல் குறித்து தகவல் கிடைத்தது. அவர்கள் தலைமையில் கொண்ட போலீசார் தாழ்வான பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்தனர். செம்மரக்கட்டைகளை லாரியின் மூலம் கடத்திச் செல்ல முயன்றபோது 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 4 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்த நான்கு பேரை சிறையில் அடைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu