பள்ளிப்பட்டு அருகே கனமழைக்கு சாய்ந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்

பள்ளிப்பட்டு அருகே கனமழைக்கு சாய்ந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்
X

கனமழை காரணமாக இடிந்து விழுந்த பள்ளி சுற்றுசுவர்

பள்ளிப்பட்டு அருகே கனமழைக்கு சாய்ந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர். பள்ளிக்குள் விஷ ஜந்துக்கள் உலாவுதல் மாணவர்கள் அச்சம்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொட்டித்தீர்த்த கனமழைக்கு கோணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளிகளுக்கு பின் புறத்தில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் முற்றிலும் சாய்ந்து விழுந்தது.

பள்ளிக்கு பின்புறத்தில் அடர்த்தியாக முள்புதர்கள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்துள்ளன. அதிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் உலாவுதல், மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரவும் விளையாடவும் அச்சமடைந்துள்ளதால், உடைந்துள்ள பள்ளி சுற்றுச்சுவரை உடனடியாக அமைத்துத் தரவேண்டும் என்று மாணவர்கள் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!